எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு அதாவது, நமக்கு நேரம் கணித்து சொல்லும் ஜோசியரின் நேரம் நன்றாக இருந்தால் தான், அவர் சொன்ன வாக்கு பலிக்கும், பெரும்பாலும் ஜோசியர்கள் வணிகப்பட்டு போய்விட்டார்கள். எனவே, அவர்களின் வாக்கெல்லாம் பலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஒன்பது கோள்களில் எந்த கோளுமே நேர்கோட்டில் இல்லை என்னும் போது எப்படி அவை எல்லாம் நமக்கு சாதகமாக இருக்க முடியும். கிரக நிலை என்பது நமது வாழ்க்கையை சீராக வைத்திருக்கவே உதவுகின்றது. இன்றைய ராசிபலன் "விரையம்" என்றிருக்கிறதா? வெளியில் முடிந்தளவு கையில் பணம் தட்டுப்பாடில்லாமல் வைத்திருக்க முயலுங்கள். அனாவசியமான செலவுகளைத் தவிருங்கள். அப்படித்தான் எடுத்தக் கொள்ள வேண்டும். வெற்றி என்று இருந்தால், துவங்க வேண்டிய நல்ல விஷயங்களை உடனே செய்யுங்கள் என்கிற ஊக்கம் அது அவ்வளவு தான். தடைகள் அனைத்து நம்முள்ளிருந்து தான் தோன்றுகின்றன. என்னை உட்பட பலருக்கு இது தெரிந்திருந்தாலும், சராசரி மனிதர்களாக மட்டுமே நாம் பல நேரங்களில் சிந்திக்கிறோம்.
No comments:
Post a Comment