Saturday, April 19, 2014

சிற்றின்ப பட்சிகள்

அடுத்தவர் மனத்தை
சூறையாடும் சிற்றின்பப் பட்சிகள்

யார் தலையில மொளகா ‍அரைக்கலாம்னு
அலையுறவங்களை நல்லவன்னு சொல்லும்
நாய் போல வாலாட்டும்

நல்லது நினைக்கவோ
செய்யவோ நினைத்தால்
நரி போல ஊளையிடும்

Wednesday, January 8, 2014

காசே தான் கடவுளடா....

சிலருக்குக் காசு மட்டும் தான் குறி...

தன் குடும்பம் என்பதெல்லாம் கிடையாது. பணத்திற்காக யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். பணமும், காமமும் மட்டும் தான் வாழ்க்கை என்றால் அதற்கு வேறு பெயர் உண்டு. அப்படி ஒரு வாழ்க்கை எனக்குத் தேவையில்லை. நான் அவை இல்லாமல் அன்பின் வழியது உயிர்நிலை என்று வாழ நினைக்கிறேன். 

Sunday, January 5, 2014

நம்பிக்கை

எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு அதாவது, நமக்கு நேரம் கணித்து சொல்லும் ஜோசியரின் நேரம் நன்றாக இருந்தால் தான், அவர் சொன்ன வாக்கு பலிக்கும், பெரும்பாலும் ஜோசியர்கள் வணிகப்பட்டு போய்விட்டார்கள். எனவே, அவர்களின் வாக்கெல்லாம் பலிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.  ஒன்பது கோள்களில் எந்த கோளுமே நேர்கோட்டில் இல்லை என்னும் போது எப்படி அவை எல்லாம் நமக்கு சாதகமாக இருக்க முடியும். கிரக நிலை என்பது நமது வாழ்க்கையை சீராக வைத்திருக்கவே உதவுகின்றது. இன்றைய ராசிபலன் "விரையம்" என்றிருக்கிறதா? வெளியில் முடிந்தளவு கையில் பணம் தட்டுப்பாடில்லாமல் வைத்திருக்க முயலுங்கள். அனாவசியமான செலவுகளைத் தவிருங்கள். அப்படித்தான் எடுத்தக் கொள்ள வேண்டும். வெற்றி என்று இருந்தால், துவங்க வேண்டிய நல்ல விஷயங்களை உடனே செய்யுங்கள் என்கிற ஊக்கம் அது அவ்வளவு தான். தடைகள் அனைத்து நம்முள்ளிருந்து தான் தோன்றுகின்றன. என்னை உட்பட பலருக்கு இது தெரிந்திருந்தாலும், சராசரி மனிதர்களாக மட்டுமே நாம் பல நேரங்களில் சிந்திக்கிறோம். 

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது....

கருடா சவுக்கியமா?!!!

இப்படித் தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். எத்தனை நல்லது செய்தாலும், நம் மீது குறை கண்டு பிடிப்பது ஒன்றே அவர்கள் நோக்கம். நல்லது, அவர்கள் அவ்வாறே இருக்கட்டும். யார் வாழ்வும் யார் கையிலும் இல்லை. அவரவர் கையில் தான் இருக்கிறது.

Sunday, December 29, 2013

நமக்கு ஆயிரம் வேலை....

நாம் அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்ப்பதை விட, நாம் நமது வேலையை செய்கிறோமா என்று பார்த்தாலே, பல தேவையற்ற விவகாரங்களைத் தவிர்க்க முடியும். அதுவும் குறிப்பாக சமூக ஊடகங்களில் பலர் தங்கள் வேலையாக கொண்டிருப்பது, அடுத்தவர்கள் ஒழுங்காக இருக்கிறார்களா? அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைத் தான். அவ்வாறு அவர்கள் பார்க்கும் போது, அவர்களுக்கு இரு வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று அவர்களை அவர்களைப் போன்ற மற்றவர்கள் கண்காணிக்கிறார்கள் மற்றும் அவர்கள் மீது முன்பு அபிமானம்  வைத்திருந்தவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுத்தது யார? யாருமில்லை. பின்பு ஏன் அவர்கள் அதை எடுத்துக் கொள்கிறார்கள் என்றால், தங்களை மற்றவர்கள் சரியான நபர்கள் என்று சொல்ல வேண்டும் என்று காட்டிக் கொள்ள நினைப்பது தான். உண்மையில், இவர்களை யாரும் சரியான நபர்கள் என்று உள்ளுக்குள் நினைப்பது இல்லை, மாறாக, விவகரமானவர்கள். இவர்களுடன் பழகுவதில் மிகுந்த எச்சரிக்கை வேண்டும் என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களுக்கும் அதை சொல்கிறார்கள். திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி என்கிற கதாபாத்திரம் சொல்வார்...குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்...அந்த வகையைச் சார்ந்தவர்கள் தான் இவர்கள். உண்மையில் இவர்கள் பேர் வாங்குவதில்லை. பெயரைக் கெடுத்துக் கொள்கிறார்கள். நமது வேலையை சரியாக செய்தாலே போதும். நம்மால் முடிந்த அளவு பிறரின் நல்ல குணங்களை எடுத்துரைத்தாலே போதும், நமக்கு நல்லது நடக்கும். நாம் எதை விதைக்கிறோமோ அதைத் தான் அறுவடை செய்வோம். 

போதையின் பாதையில்....

மனிதர்களுக்கு போதையில் தலை கால் புரியாமல் போய்விடுகிறது. என்ன பேசுகிறோம், என்ன செய்கிறோம் என்பதே தெரிவதில்லை. இப்படி ஒரு போதை தேவையா?

தன் மீது மரியாதையும் நம்பிக்கையும் வைத்திருக்கும் அத்துணை பேரையும் இழந்துவிடுகிறார்கள். இப்படி ஒரு போதை தேவைதான? சிந்தித்துப் பார்க்க வேண்டும். இவர்களை நம்பி கூட நடக்கவே முடியாத போது. எப்படி ஒரு ஓடத்தில் போக முடியும். மற்றவர்களாவது பரவாயில்லை. அவர் குடும்பத்தினரை யோசித்துப் பாருங்கள். எத்தனை அவமானம். எத்தனை மனஇறுக்கம் இருக்கும்.

போதை வேண்டாம் நண்பர்களே! போதை நிச்சயமாக உங்களை அழித்துவிடும். அணு அணுவாக சித்ரவாதை செய்யும். இப்போது உங்களுக்கு அது சுகமாக இருக்கலாம். காலப் போக்கில், உங்களைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் அது இழக்க செய்து விடும்.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பயன்?!